பேருந்தில் நடந்த அதிசயம்; பலரும் பகிர்வு!

பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை.

பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் யாராவது அமர்ந்திருந்தால் மதகுருமாரைக் காணுமிடத்து உடனடியாக எழுந்து இடம் விட்டுக் கொடுக்கவேண்டும்.

மேலும் பௌத்த மதகுருமார்களாயின் அவர்களுக்கு அருகில் பெண்கள் அமர்வதும் விரும்பப்படுவதில்லை. இந்த நிலையிலேயே குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, பௌத்த பிக்கு ஒருவருக்கு அருகில் இஸ்லாமிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கின்றார். அவர்கள் இருவருக்கும் முன்னால் இந்து மத தெய்வமான மகாலட்சுமி அமர்ந்து அருள்பாலிப்பதைப்போல காட்சி அமைந்துள்ளது.

இதனை முன்னிறுத்தியே பேருந்தில் ஏற்பட்ட நல்லிணக்கம் என பலரும் தமது கருத்துக்களினைத் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்ரீலங்காவில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் சில தரப்புக்களின் முரண்பட்ட நடவடிக்கைகளினால் மத நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து காணப்படுப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த புகைப்படம் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது.

Allgemein