வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா

ஏவுகணை சோதனைகளை நிறுத்தாவிட்டால் வடகொரியா மீது அணுகுண்டு வீச நேரிடும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் சர் மைக்கேல் ஃபாலன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அணுஆயுதம் தொடர்பான சோதனைகளை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை எனில் பிரித்தானியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க நேரிடும் என சர் மைக்கேல் ஃபாலன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கிடையே நடைபெறும் கருத்து மோதல்கள், அதனால் உருவாகியிருக்கும் போர்ச் சூழல் என அனைத்தையும் எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என கூறியுள்ள அவர்,

வடகொரிய தலைவர் கிம் ஜோங் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்பது அமெரிக்காவு எதிராக இருப்பினும், அதனால் பிரித்தானியாவும் மிகக்கடுமையான அச்சுறுத்தலில் உள்ளாகியிருப்பதாக அவர் எச்சரித்தார்.

வடகொரியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விடவும் லண்டன் மாநகருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

வடகொரிய தலைநகருக்கும் லண்டனுக்கும் இடைப்பட்ட தூரம் என்பது 5,380 மைல்கள். ஆனால் லாஸ் எஞ்சல்ஸ் நகருக்கு 6,000 மைல்கள் தொலைவு உள்ளது என்றார்.

அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் தங்கள் ஏவுகணையால் குறிவைக்கப்பட்டுள்ளதாக கிம் ஜோங் கொக்கரித்தாலும், அதன் சாத்தியங்களை நிபுணர்கள் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால் இதே நிலை நீடித்தால் அதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என சர் மைக்கேல் ஃபாலன் எச்சரித்துள்ளார்.

இதுவரையில் லண்டன் மாநகரை தாக்கும் அளவில் வடகொரியாவிடம் அணுஆயுதம் இல்லை எனவும், ஆனால் கண்டிப்பாக அது சாத்தியமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வடகொரியா சோதனை மேற்கொண்ட ஹைட்ரஜன் குண்டை லண்டனில் வீசினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் எனவும் அதன் தாக்கம் 100 மைல்கள் தாண்டி, பர்மிங்காம் வரை எட்டலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Allgemein உலகச்செய்திகள்