நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாநாடு ஒன்று நேற்று நடாத்தப்பட்டது.

ஶ்ரீலங்காவில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள படைகளால் நடந்தப்பட்ட இனவழிப்பு போரில் வலுக்கட்டாயமாக கடத்தி காணமல் ஆக்கப்பட்ட பல தமிழர்கள் போர் ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் இன்று அதற்காக நீதி கிடைக்காமல் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் தமது உறவுகளை தேடி வருகிறார்கள் .

ஈழம் கடந்து புலம்பெயர் தேசத்திலும் தொடரும் நீதி போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது இதில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உலக பேச்சாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Allgemein தாயகச்செய்திகள்