மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை: இராணுவத்தினரை நாம் பாதுகாப்போம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, காலி முகத்திடலில் கூடும் கூட்டத்தைப் போன்று இரு மடங்கு மக்கள் கூட்டம் கெம்பல் மைதானத்திற்கு திரண்டு வந்தார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள மக்கள் ஒற்றுமையாக இருப்பதுடன், கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஸ்ரீ.சு.கட்சிக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன.

இதுவே ஜனாதிபதியின் வெற்றியாகும். அந்த வகையில் எமது கட்சியிலிருந்து யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

ஸ்ரீ.சு.கட்சியின் மாநாட்டுக்கு மஹிந்த தரப்பினர் முதலிலேயே வரமாட்டோம் என்று கூறினார்கள். பின்னர் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பல வழிகளில் அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும் வர மாட்டோம் என்று குறிப்பிட்டார்கள். இது ஒரு ஏமாற்று நாடகம் என குறிப்பிட்டார். நாம் இருக்கும் வரை இந்த நாடு பிளவு படுவதற்கு இடமளிக்கமாட்டோம். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம். எமது இராணுவத்தினருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அவர்களை நாம் பாதுகாப்போம். இதுவே ஜனாதிபதியின் அறிவிப்பு எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Allgemein