இலங்கைக்கு இந்தியா வழங்கிய பாதுகாப்பு கப்பல்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல்வழி ஒத்துழைப்பின் கீழ் இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவிற்கு கடல் எல்லை பாதுகாப்பிற்கான கப்பல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது.

வருண என்ற இந்த கப்பலை தாம் இலங்கைக்கு நேற்று வழங்கியதாக இந்திய கடல்எல்லை பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இதனை இலங்கை கரையோர பாதுகாப்பு அதிகாரி ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவிடம் நேற்றையதினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் சம்பிருதாய பூர்;வமாக கொச்சியில் இடம்பெற்றது.

படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி எஸ்எஸ் ரணசிங்கவும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.

Allgemein