இலங்கையின் போர்க்குற்ற நிராகரிப்பு: சர்வதேசம் களமிறங்கும் நிலை!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், சர்வதேசம் நேரடியாக களமிறங்கி நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படுமென அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள போதும், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடயம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையே காணப்படுகிறது.

அதுமட்டுமன்றி, போர்க்குற்றத்தை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்ற நிலையில், அரசாங்கத்திற்குள்ளேயே தற்போது அதுகுறித்து கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் இலங்கைக்கு ராஜதந்திர ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்த சர்வதேசம் முனைவதாகவும், விரைவில் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட ராஜதந்திரிகளை சந்தித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Allgemein