அமைச்சர் விஜயகலா பதவி விலகவேண்டும்

சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

புங்­கு­டு­தீவு பாடசாலை மாணவி சி.வித்­தியா படு­கொ­லை­யின் முக்­கிய சந்­தே­க­ந­ப­ரன சுவிஸ்­கு­மா­ரைக் காப்­பாற்­றி­ய­தன் கார­ண­மா­கவே விஜ­ய­க­லா­வைப் பதவி வில­கு­மாறு தான் கேட்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

நாமல் ராஜ­பக்ச தனது கீச்­ச­கத்­தில் நேற்று இது தொடர்­பில் பதி­விட்­டி­ருந்­தார்.

‘‘புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் முதன்­மைச் சந்­தேக நபரை திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்­தான் காப்­பாற்­றி­ய­தாக அவரே ஒப்­புக்­கொண்­டுள்­ளார். சிறு­வர் விவ­கார அமைச்­சரே இது போன்ற கீழ்த்­த­ர­மான விட­யங்­க­ளில் ஈடு­ப­டு­வது வருந்­தத்­தக்­கது. உட­ன­டி­யாக பதவி விலகி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க வேண்­டும்’’ என்று அந்­தப் பதி­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வித்­தியா படு­கொலை வழக்கு விசா­ர­ணை­யில் முக்­கிய சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ்­கு­மார் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில், மக்­கள் என்னை மின்­கம்­பத்­தில் கட்டி வைத்­தி­ருந்­த­போது அங்கு வந்த இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்­தான் விடு­வித்­தார். இரண்டு மணி நேரம் என்­னு­டன் நின்­றி­ருந்­தார் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இதனை அடிப்­ப­டை­யாக வைத்தே நாமல் ராஜ­பக்ச மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார் என்று கரு­தப்­ப­டு­கி­றது.

Merken

Allgemein தாயகச்செய்திகள்