எஞ்சியுள்ள விடுதலை புலிகளையும் கொல்ல வேண்டுமாம்!கோசமிடும் சிங்கள அமைச்சர்

விடுதலைப் புலிகள் தரப்பில் தற்போது தலை இல்லாவிட்டாலும் வால்கள் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கின்றன என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று முழக்கமிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் அவர் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் அவ்வாறான நிலை ஏற்படும் சாத்தியக்கூறு முடிவடையவில்லை அவர் தெரிவித்துள்ளார்.

இன்றும் புலி உறுப்பினர்கள் மிச்சம் இருக்கின்றார்கள் எனவும் எனினும் அவ்வாறான மிச்சம் மீதிகளைக் கண்டு பிடித்து அனுதாபம் காட்டாமல் கொன்று, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் பரணவிதான குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விழிப்புடனேயே இருக்கின்றது எனவும் பரணவிதான மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein