பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழர்கள் போராட்டம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா பிரதமர் அலுவலகம் முன்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  மேற்கொண்டுள்ளது.

இன்றைய தினம் நண்பகல் வேளையில் நடந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், இன்றைய சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein உலகச்செய்திகள் தாயகச்செய்திகள்