வடகொரியாவுக்கு வலதுகையாக இயங்கும் ரஷ்யா !! அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவின் போர் மிரட்டலுக்கு நடுவே வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா போர் மிரட்டல்: வட கொரியாவுக்கு ரஷியா ஆதரவு? மாஸ்கோ: அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் சோதனை நடத்தும் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை பொருளாதார தடை விதித்தன.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா சமீபத்தில் நடத்தியது. எனவே வட கொரியா மீது அமெரிக்கா போர் மிரட்டல் விடுத்தது. மேலும் தென் கொரியாவுடன் இணைந்து வட கொரிய எல்லையில் ராணுவ பயிற்சியும் நடத்தி வருகிறது.
இது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் ‘துபோலேவ்-95 எம்.எஸ்’ என்ற அணு அயுத போர் விமானங்கள் வட கொரியா அருகே பறந்தன. பசிபிக் கடல், ஜப்பான் கடல், மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் பகுதியில் வட்டமடித்தன. இப்பகுதியில் ரஷிய போர் விமானங்கள் இதுபோன்று பறந்தது இல்லை.
இது குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தங்களது தொழில் நுட்பத்திறன் உற்பத்தி அணு ஆயுத போர் விமானங்கள் சர்வதேச கடல் எல்லையில் பறந்ததாக தெரிவித்த அதே நேரத்தில் கொரிய தீப கற்பகத்தில் அமெரிக்கா நடத்தி வரும் ஒருதலைபட்சமாக ராணுவ பயிற்சியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதன் மூலம் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டத்தை குறைக்க முடியாது என ரஷிய அரசின் செய்தி தொடர்பாளர் மரியா ‌ஷகாரோவா கூறினார். இதை வைத்து பார்க்கும் போது அமெரிக்காவின் போர் மிரட்டலுக்கு எதிராகவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கி உள்ளது தெரிய வந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Allgemein உலகச்செய்திகள்