பிரான்சின் சிறைகளில் 33 000 கைத்தொலைபேசிகள் பறிமுதல் !

பிரான்சின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடத்தில் இருந்து 33 ஆயிரம் கைத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளுக்கு தொடர்பாடல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற புதிய விவாதம் ஒன்று தற்போது எழுந்துள்ள நிலையில் இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த 33 ஆயிரம் கைபேசிகளும் கடந்த ஆண்டு மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை எனவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் சிறைக் கைதிகளுக்கு தொடர்பாடல் உரிமை வழங்கப்படுவது மட்டுமல்ல, அது அவர்களுக்கு உளத்துணையாக இருப்பது மட்டுமன்றி, அவர்களை சீர்திருத்தி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர இயலும் என ஒரு தொகுதி மனித உரிமை அமைப்புக்கள் வாதிடுகின்றன.

இதனை முற்றாக நிராகரித்துள்ள நீதி அமைச்சர், இது மென்மேலும் சட்டவிரோத செயல்களுக்கே வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Allgemein