ஈழத்தின் முக்கிய செய்திகள் » வடக்கு முதல்வரின் அறிவிப்பு! மைத்திரி, ரணிலுக்கு நெருக்கடி

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்திற்கு வடமாகாண சபை ஆதரவளிக்காது என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாகாண சபை வளாகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு திருத்தமானது நாடாளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது என முதல்வர் விளக்கினார்.

இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா மாகாணத்தில் இன்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மைத்திரி, ரணில் தலைமையிலான மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein தாயகச்செய்திகள்