மீண்டும் கனடா ஸ்காபிறோவில் சங்கிலி அறுப்பு -திருடனை மடக்கி பிடித்த தமிழா்கள்

கனடாவில் வீதியால் சென்ற தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கனடா ஸ்கா பிறோ(Scarborough) நகர் பகுதியில்  இரவு 8 மணியளவில்(21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்கா பிறோ (Scarborough )  நகர் பகுதியில்  பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த நிலையில் வீதியால் சென்ற கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளார்.

எனினும் குறித்த தமிழ் பெண் தனது சங்கிலியை கையால் இறுக்கப் பற்றிய நிலையில் அப்பெண்ணை வீதியில் தள்ளி விழுத்தி விட்டு திருடன் தப்பி சென்றுள்ளார்.

குறித்த பெண் கீழே விழுந்ததை அவதானித்த அந்த வீதியால் சென்ற ஏனைய தமிழ் உறவுகள் தப்பி ஓடிய திருடனை பிடிப்பதற்காக பின்தொடா்ந்தனா்.

இந்நிலையில் குறித்த திருடன் அகப்பட்டபோது திருடனுடன் ஏனைய மூன்று கறுப்பினத்தவா்களும் ஒன்று சோ்ந்து குறித்த தமிழ் இளைஞா்களிடம் தகராறில் ஈடுபட்டடுள்ளனா்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக திருடன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டான்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.