பின்லாந்தை தொடர்ந்து ஜேர்மனியிலும் தாக்குதல்: பதற்றத்தில் ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளான பின்லாந்தை தொடர்ந்து ஜேர்மனியிலும் மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Wuppertal-Elberfeld நகரத்தில் உள்ள ஒரு கடையிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 31 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25 வயதுடையவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருவதாக Wuppertal பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், இத்தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு தொடர்புடையதா என்பது தெளிவாக இல்லை.

பார்சிலோனா, பின்லாந்தை தொடர்ந்து ஜேர்மனியலும் தாக்குதல் நடத்தப்பட்டள்ள சம்பவம் ஐரோப்பியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Allgemein உலகச்செய்திகள்