அழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி

உலகில் முன்னணி செல்வந்தர் மற்றும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக் (Elon Musk) மனிதர்களுக்கு அழிவு இல்லாத வாழ்வை கொடுக்கும் ஓர் கருவியினை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் உருவாக்கிவரும் புதிய கருவியானது மனித மூளைக்குள் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுவதோடு அது நினைவுகளை சேமித்து வைக்கும் கருவியாக தொழிற்படும் எனவும் கூறப்படுகின்றது.

தொழில் நுட்ப உலகினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த திட்டம் முழுமைப்பெறுமாயின் மனித எண்ணங்களுக்கு அழிவு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் கருவியின் மூலம் செயற்கை நுண்ணறிவினை மூளையுடன் தொடர்பு படுத்தி அதனூடாக கணினி போன்ற சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என எலான் மசுக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மனித குலம் எதிர்நோக்கும் பல்வேறு வகையான நோய்களுக்கும் இதன் மூலமாக தீர்வுகளை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓபன் ஏஐ எனப்படும் இது செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வு செய்யும் இவரது ஆராய்ச்சி நிறுவனம் இந்த புதிய கண்டு பிடிப்பிப்புக்காக தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

Allgemein