தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்கப்பட நடவடிக்கை

யாழ். நல்லூர் பின் வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு, எல்லைப் படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ள அவர், முதலமைச்சர் இந்த விடயத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் இடம்பெற்று வரும் நிலையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தான் மாநகர சபை ஆணையாளராக இருந்த போது குறித்த நினைவு தூபியை நிர்மாணித்து திறந்து வைத்ததாகவும், அதற்காக தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Allgemein தாயகச்செய்திகள்