நீதிபதி இளஞ்செழியனுக்கு நேசக்கரம் நீட்டிய அமெரிக்கா!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நீதிபதியை கண்ட அமெரிக்க தூதுவர், அவரைக் கட்டியணைத்து கைலாகு கொடுத்திருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்த இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்தின் போது நீதிபதி என்ற நிலையில் இருந்த மா.இளஞ்செழியன் நடந்துகொண்ட விதம் அனைத்தையும் பார்த்ததாக அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

நீதிபதியின் செயலைக் கண்டு மிகுந்த மன நெகிழ்ச்சி அடைந்ததாகவும், அமெரிக்க தூதுவர் என்ற ரீதியில் என்ன உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு நீதிபதியிடம் அமெரிக்க தூதுவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து அழுதிருந்தார்.

இந்த சம்பவத்தை கண்டு “ஆழமாக நெகிழ்ந்தேன்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்திருந்த பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein