இலங்கை செய்திகள் » கோத்தபாயவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கொன்று இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அவன்கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனம் அதிக இலாபம் கிடைக்கும் வகையில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றை நடத்தி செல்ல இடமளித்தன் மூலம் அரசுக்கு 11.4 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட தரப்பில் அடிப்படை எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது சம்பந்தமான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல தெரிவித்துள்ளார்.