நல்­லாட்சி அரசு மன­மி­ரங்கி எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும்

இர­ணைத்­தீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்­பாட்டம் 
(ஆர்.யசி)

தமது காணி­களை மீளப்­பெற்­றுத்­த­ரு­மாறு கோரி தொடர்ச்­சி­யாக 101 நாட்­க­ளாக போராடும் இர­ணைத்­தீவு பிர­தேச மக்கள் நேற்று கொழும்பில் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­த­துடன் தமது பூர்­வீக நிலத்தை பெற்­றுத்­த­ரும்­படி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர். நல்­லாட்சி அர­சாங்கம் மன­மிரங்கி

எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும். நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் இந்த ஒன்­றையே கேட்டு நிற்­ப­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் தெரி­வித்­தனர்.

கிளி­நொச்சி , பூந­கரி பிர­தேச சபைக்கு உட்­பட்ட இர­ணைத்­தீவு மக்­கயே தமது பூர்­வீக நிலங்­களை மீண்டும் பெற்­றுத்­த­ரக்­கோரி நேற்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­தனர். நேற்றுப் காலை கொழும்பில் இடம்­பெற்ற இந்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்னர் அவர்கள் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஒன்­றையும் நடத்­தினர்.

இதன்­போது கருத்து வெ ளியிட்ட ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் மேலும் கூறு­கையில்,

எமது பூர்­வீக்கக் காணி­களை மீட்­டுகும் முயற்­சியில் எமது இர­ணைத்­தீவு மக்கள் 101 நாட்­க­ளாக இரவு பக­லாக போராட்டம் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். நாம் பூர்­வீ­க­மாக வாழ்ந்த எமது நிலங்­களில் எமது அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்த நாம் விரும்­பு­கின்றோம். எனினும் மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாக போரா­டி­வரும் எமது மக்­க­ளுக்கு இன்று வரையில் எந்­த­வொரு நீதியும் கிடைக்­க­வில்லை.

அர­சியல் தலை­வர்கள், வடக்கின் அர­சியல் வாதிகள், அமைச்­சர்கள் பலரும் வந்து எமது போராட்­டத்தை பாரி­வை­யிட்டு சென்­றுள்­ள­னரே தவிர பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு ஒன்றை இது­வ­ரையில் எவரும் முன்­வைக்­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே நாம் இலங்­கையின் தலை­ந­கரில் வந்து எமது போராட்­டத்தை முன்­னெ­டுத்தோம். எமது பிரச்­சி­னைகள் முழு இலங்­கை­யர்­க­ளுக்கும் தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் நாம் எமது போராட்­டத்தை இங்கு முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

நாம் வாழ்ந்த பூமியை எங்­க­ளி­டமே தாருங்கள் என்­பதே எமது ஒரே நோக்­க­மாகும். எமது பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை எமது மண்­ணி­லேயே முன்­னெ­டுத்தோம். நாம் வாழ்­வ­தற்கு உகந்த இடமும் அங்­கேயே உள்­ளது. எமது கால்­ந­டைகள், தள­பா­டங்கள், சொத்­துக்கள் அனைத்­துமே அங்­கேயே உள்­ளன. இவற்றை மீண்டும் எங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்­பதே எமது ஒரே கோரிக்­கை­யாகும். எமது நிலங்­களை இழந்து பல்­வேறு பகு­தி­களில் நாம் சிதறி வாழ்ந்து வரு­கின்றோம். ஆகவே எம்மை எமது மண்ணில் மீண்டும் ஒன்­றி­ணைக்க வேண்டும். இந்த கோரிக்­கையை முன்­வைத்து எமது மக்கள் அழுது மன்­றா­டு­கின்­றனர். அதன் நிமித்­தமே மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக நாம் இங்கு வருகை தந்து எமது கோரிக்­கை­களை முன்­வைக்­கின்றோம்.

கொழும்­பிற்கு வந்து எமது ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினோம். பல்­வேறு சமூ­கங்­களும் கொழும்பில் வாழும் நிலையில் அனை­வ­ருக்கும் எமது பிரச்­சி­னைகள் தெரிய வேண்டும் என்ற கார­ணத்­தினால் எமது ஆர்ப்­பாட்­டத்தை நாம் நடத்­தினோம். அதன் பின்னர் எமது கோரிக்­கையை நாம் அறிக்­கை­யாக தாரித்து ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்க ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு சென்றோம். எமது அறிக்­கையை ஜனா­தி­பதி மேல­திக செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைத்தோம். எமது கருத்­து­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் நாம் தெளி­வாக முன்­வைத்தோம். ஆனால் எமது கோரிக்­கையை செவி­ம­டுத்­த­தாக தெரி­ய­வில்லை. நாம் முன்­வைத்த கார­ணி­களை பாது­காப்பு அமைச்­சிற்கு அனுப்­பு­வ­தா­கவும், அவர்­களின் பதில் கிடைத்­த­வுடன் தெரி­விப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர் என்றார்.

போராட்­டத்தை நடத்­தி­வரும் பொது­மக்­களின் ஒரு­வ­ரான ஜெய­சீலி கருத்து தெரி­விக்­கையில்,

எமது சொந்த மண்ணை மீட்­கவே நாம் மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாக போராடி வரு­கின்றோம். நூறு நாட்கள் நாம் போரா­டு­கின்ற போதிலும் எமது நியா­ய­மான கோரிக்கை அர­சாங்­கத்தின் பார்­வையில் பட­வில்லை. நாம் பிறந்த மண், எமது பூர்­வீக நிலங்கள் எமக்கு வேண்டும். எமது வாழ்­வா­தா­ரத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற நிலையில் சகல விதத்­திலும் ஏமாற்றம் கண்டு இன்று போராடி வரு­கின்றோம். ஆகவே நல்­லாட்சி அர­சாங்கம் மன­மி­றங்கி எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும். நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் இந்த ஒன்­றையே நாம் கேட்டு நிற்­கின்றோம் என்றார்.

இர­ணைத்­தீவு பிர­தேச மக்­களின் ஒரு­வ­ரான கே. பிர­தீபன் கருத்து தெரி­விக்­கையில்,

இர­ணை­தீவு பகுதி எமது வாழ்­வா­தா­ரத்தை கொண்ட மண்­ணாகும். கடற்­தொழில் செய்யும் எமது பகுதி இன்று எம்­மிடம் இருந்து பறிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போது எமது வாழ்­வா­தா­ரத்தை முன்­னெ­டுக்க முடி­யாது தவித்து வரு­கின்றோம். நாளாந்தம் நாம், எமது பிள்­ளைகள் என அனை­வரும் பசி­யோடு உள்ளோம். நாமும் சுதந்­த­ர­மாக இருந்து தொழில் புரிய வேண்டும். மக்கள் எந்­த­வித தடை­களும் இல்­லாது வாழ வேண்டும். இதை தவிர வேறு எதையும் கேட்­க­வில்லை. வாழ்­வா­தா­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்டே எமது போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எமது பிள்­ளை­களின் எதிர்­காலம், வாழ்க்கை பற்­றிய கவலை மட்­டுமே எமக்கு உள்­ளது. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தும் நாம் பசி­யோடு உள்ளோம். ஆகவே விரைவில் நல்­லாட்சி அர­சாங்கம் எமக்கு தீர்வை பெற்­றுத்­தர வேண்டும்.

இர­ணை­தீவு என்­பது எமது பூர்­வீக நில­மாகும். எனினும் இரா­ணுவ நெருக்­கடி கார­ண­மாக 1992 ஆம் ஆண்டு நாம் சொந்த நிலங்­களை விட்டு இடம்­பெ­யர்ந்து வந்­துள்ளோம். எமது போராட்டம் எமது மண்­ணுக்­கா­கவே என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம். இது தொடர்பில் பிர­தேச செய­லாளர், மாவட்ட செய­லாளர், அர­சியல் வாதிகள் என சகலருக்கும் எமது கோறிக்கைகளை விடுத்துள்ளோம். எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் நாம் இங்கு வந்து நேரடியாக அரசாங்கத்திடம் தெரிவிக்க முன்வந்துள்ளோம். ஜனாதிபதியும் , பிரதமரும் எமது நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு எமது நிலங்களை மீண்டும் எமக்கே வழங்க வேண்டும். எம்மால் இனியும் போராடி எமது வாழ்கையை அழிக்க முடியாது. ஆகவே நாம் நியாயமாக முன்வைக்கும் காரணிகளை இனியும் புறக்கணிக்காது செயற்பட வேண்டும் என்றார்.

Allgemein தாயகச்செய்திகள்