சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு :

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (11.08) மதியம் 12.00மணியளவில் வீட்டிலிருந்து சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீட்டில் இறந்த நிலையில் சடலத்தினை அவதானித்த பொதுமக்கள் உடனே வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக அவரின் நண்பரிடம் வினாவியது போது,

நேற்று காலை அவரை நான் சந்தித்தேன் அப்போது அவர் என்னிடம் நன்றாக கதைத்தார். அவருக்கு வருத்தங்கள் இருக்கின்றன. வருத்தத்தின் காரணமாக தான் இறந்தார என தெரியவில்லை . இவரின் மனைவி மகளுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும்  தெரிவித்தார்.

எஸ்.கணேசலிங்கம் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.​

Allgemein தாயகச்செய்திகள்