இலங்கை விஜயம் செய்யவுள்ள பாரியவிமானம்

இலங்கை விமான சேவை வரலாற்றில் இம்மாதம் 14ம் திகதி பாரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் டுபாயை தொடர்புபடுத்தி இந்த புதிய விமான சேவை ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் 6 விமானங்கள் எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை கேந்திரமாக கொண்டு வரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்ட பின்னர் பெரும் எண்ணிக்கையிலான விமானங்கள் தரையிறங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவித்த பிரதிஅமைச்சர் 45 மீற்றர் அகலத்தை கொண்டதாக இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை தற்பொழுது இரண்டு பக்கங்களிலும் 15 மீற்றரிலிருந்து 75 மீற்றார் வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 3335 மீற்றர் நீளத்தை கொண்ட விமானம் தரையிறங்க கூடிய வசதியை கொண்டதாக தற்போது விமானநிலையம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Allgemein உலகச்செய்திகள்