இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா-சீனா போர்: முதலில் இலக்காவது தமிழகமா?

இந்தியா-பூடான்-சீனா எல்லைப் பகுதியான டோக்லம் பீடபூமி பகுதியில் இந்தியாவும் சீனாவும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் போர் பதற்றம் அங்கு வெகு நாளாக நீடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த நிலையில், இலங்கையில் அம்பான் தோட்டா பகுதியில் சீனா துறைமுகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதனை அமைத்துள்ளது சீனா..

சீனாவின் இந்த துறைமுகமானது உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ளதால் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக உடன்பாடு இல்லாத நிலையை தெரிவித்துள்ளன.

இந்த துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் சீனா போர்ப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும்இவையாவும் இந்தியாவிற்கு பயத்தை ஏற்படுத்த செய்யப்படும் வேலையாக இந்தியா கருதுகிறது.

மேலும் இந்த போர்ப்பயிற்சி சீன துறைமுக, ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா சீனா போர் மூண்டு விடும் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை சீனாவில் இருந்து வரும் தகவல்களும் உறுதி படுத்தின. இந்த நிலையில் தற்போது மருத்துவ கப்பல் என்ற பெயரில் இலங்கை துறைமுகத்திற்கு ஒரு கப்பல் நேற்று முன்தினம் வந்துள்ளது.

மருத்துவ உதவி வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் நவீன ஏற்பாட்டுடன் இக்கப்பலில் காணப்படுகின்றன.

அத்துடன், அவசர தேவைகளின் போது தரையுடன் தொடர்புகொள்ள ஹெலிகொப்டர் இறங்கு தரையொன்றும் இக்கப்பலில் காணப்படுகின்றது.

வெகு விரைவில் இந்தக்கப்பல் சென்று விடும் என்று கூறப்பட்டாலும், இது ஒரு வேவு பார்க்கும் வேலையாக இருக்கும் என்று சந்தேகிக்க படுகிறது.

இலங்கை துறைமுகத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எல்லையில் படைகள் குவிகப்பட்டாலும், தமிழக கடல் எல்லையை பாதுகாப்பு வளையம் குறைந்த பகுதியாக சீனா கருதுகிறது.

Allgemein உலகச்செய்திகள்