சீனப் பிரஜை ஒருவர் கொழும்பில் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சீனப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து 20 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2 ஆயிரத்து 200 கிராம் “கோத்தல கிம்புட்டு” என்ற மூலிகை மருந்து என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரான சீனப் பிரஜை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Allgemein