கடத்தப்பட்ட கடற்படை வீரர் மீட்கப்பட்டுள்ளார் !

தமிழக மீனவர்களால் கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட கடற்படை வீரர் தற்பொழுது மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது அவருக்கு கடற்படையின் மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் அவரைப் படகில் கடத்திக் கொண்டு சென்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இரு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்ட கடற்படை வீரர் தாக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.