துன்னாலையில் 90பேர் STFவிடம் சரணடையாவிட்டால் நிலமை மோசமாகும்

துன்னாலையில் போலிஸ் விசேட அதிரிடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படைமீது தாக்குதல் நடாத்திய 96பேரும் தாமாக முன்வந்து போலீசில் சரணடைய வேண்டும் தவறினால் அனைவரும் கைத்து செய்யப்பட்டே வடமராட்சி பகுதியில் இருந்து விசேட அதிரடிப்படை வெளியேறும் என்று தெரிய வருகிறது.

துன்னாலையில் போலிசார் மீது 96பேர் இனைந்து தாக்குதல் நடாத்தி இருந்தனர்.

பருத்தித்துறை மற்றும் நெல்லியடி போலிஸ் நிலையத்தின் வாகனங்கள் முற்றுமுழுதாக சேதமடைந்தன.

போலிசார் உதவிக்கு விசேட அதிரடி படையினரை எடுத்தனர் ஆனாலும் விசேட அதிரடி படையினர்மீதும் கடுமையான தாக்குதல் துன்னாலை வன்முறை கும்பலால் நடாத்தப்பட்டது.

விசேட அதிரடிபடையினரால் பின்வாங்கப்பட்ட நிலையில் கடற்படை இறக்கப்பட்டபோதும் கடற்படையினரும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பில் இருந்து இறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் இன்றுவரை 96பேரில் 14 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்.

புகைப்படங்கள் மற்றும் பெயர்களுடன் விசேட அதிரடி படையினர் தினமும் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

விசேட அதிரடி படையினர் தம்மை நெருங்கினால் தாக்குவதற்கு கத்திகள் , கோடரிகள் , கட்டு துவக்குகள் , கை குண்டுகள் சகிதம் 92 பேரும் வடமராட்சியின் சோழியவத்தை, பற்றைகள் , பொதுமக்கள் குடியிருக்காதவிடுகள், வீதிகளில் தலைமறைவாக நடமாடி வருவதாக STF அதிரடி படை வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகிறது.

துன்னாலை கலிகை மற்றும் குடவத்தை பகுதியை சேந்த ஆயுதம் ஏந்திய 96பேரும் உடனடியாக போலீசிடம் சரணடைய வேண்டும் எனவும் 96பேரையும் கைது செய்யும்வரை விசேட தேடுதல் வேட்டை அரங்கேறும் என்று விசேட அதிரடி படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Merken

தாயகச்செய்திகள்