ரஷ்யா மீது தடைவிதிக்கும் சட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

2016ஆம் ஆண்டு அமெரிக்கா தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ரஷ்யா மீது தடை விதிக்க இயற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட ரீதியாக கையெழுத்திடப்பட்ட அந்த மசோதாவில் இரான் மற்றும் வட கொரியா மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், காங்கிரஸ் அனுமதியின்றி ரஷ்யா மீது விதிக்கப்படும் தண்டனையை எளிதாக்குவதில் அதிபரின் அதிகாரத்தை ஒடுக்குவதாக அமையும்.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. அதே போன்று ரஷியாவுடன் கூட்டணி வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை டிரம்பும் மறுத்து வருகிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்ற பிறகு, அந்த மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடுவார் என இதற்கு முன்னர் வெள்ளை மாளிகை சுட்டிக் காட்டியிருந்தது.

செவ்வாய்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் இந்த மசோதா குறித்து தானும், அதிபரும் “மகிழ்ச்சியடைவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

Allgemein உலகச்செய்திகள்