புலிகள் அமைப்பின் தடையை நீக்கிய 8 விஷயங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியிருப்பதற்கு தமிழின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு போராடி வந்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சில தனிநபர்களின் பெயர்களும், 22 அமைப்புகளின் பெயர்களும் பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்திருந்தது. அதைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பையும் பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்தது… தடையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து 2011-ம் ஆண்டு லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அதில், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தாக்குதல் நடத்திய மற்றும் தாக்குதல் நடத்துவதற்கான திறன் விடுதலைப் புலிகளிடம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை’ என அறிவித்து, அதன் மீதிருந்த தடையையும் நீக்கியுள்ளது, ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம். இந்தச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழின ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்த மேல் முறையீடு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சில அம்சங்கள் குறித்து வழக்கறிஞரும், தி.மு.க. செய்தித்தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விளக்கியிருக்கிறார். அதிலுள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு:

1. கடந்த 2014ம் ஆண்டு கீழ்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பிலேயே, „தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தாக்கல் செய்யவில்லை“ எனக் கூறியுள்ளது.

2. புலிகள் அமைப்போ புலிகளின் பிரதிநிதிகளோ 2011-ம் ஆண்டுக்குப் பிறகும் எவ்வித சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடவில்லை. எனவே 2011-ம் ஆண்டு தடை நீட்டிப்புக்கான ஐரோப்பிய கவுன்சிலின் வரைமுறை செல்லாது.

3. மேலும் 2011-2014 புலிகள் தரப்பில் வழக்கிற்கு செலவு செய்ததை ஐரோப்பிய கவுன்சிலே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய கவுன்சில் வழங்கிய மூன்றாம் நாடு (இந்தியா) தொடர்பான ஆவணங்களை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

4. இந்த வழக்கின் போது 2011-ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் இணையதளத்தில் / ஊடகத்தில் வந்த செய்திகளின் அடிப்படையிலானது. ஐரோப்பிய நீதி எல்லையில் குற்றச்செயலுக்கான எவ்வித சாட்சியமும் இவர்கள் கொடுக்கவில்லை.

5. ஐரோப்பிய கவின்சிலில் 2011-ம் ஆண்டில் நீட்டித்த தடையை மட்டுமே நீக்கியுள்ளது. ஆனால், 2006-ல் ஐரோப்பிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றிய புலிகளின் தடை உத்தரவை இதுவரையில் நீக்கவில்லை. இரண்டும் வெவ்வேறு வடிவத்திலான ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு.

6. இந்தத் தீர்ப்பின் மூலம் 2011 – 2015 காலக்கட்டத்தில் புலிகளின் பணமோ, சொத்தோ முடக்கப்பட்டிருந்தால் அது மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.

7. இத்தீர்ப்பை ஐரோப்பிய கவுன்சில் நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. தனிச் சட்ட கவுன்சிலிலோ நாடாளுமன்றத்திலோ இயற்றத் தேவையில்லை.

Merken

Allgemein உலகச்செய்திகள்