இலங்கையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கை சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இனி வரும் காலத்தில் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

வாகன இறக்குமதிகள் கொழும்பு துறைமுகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எனினும் ஹம்பாந்தொட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது குறைவடைந்ததன் காரணத்தில் கொழும்பு துறைமுகத்தில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டு, கப்பல்கள் ஹம்பாந்தொட்டைக்கு அனுப்பட்டது.

இதன் காரணமாகவே வாகனங்களில் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இனி வரும் காலங்களில் கொழும்பு துறைமுகத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில் வாகனங்களில் விலைகளில் குறைவு ஏற்படலாம் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Allgemein