பிரித்தானியாவில் 150 பேரின் குடியுரிமை பறிபோகின்றது..!!

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் தீவிரவாதத் தாக்குதல்களால் அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களின் குடியுரிமையை பறித்து அவர்கள் நாடு திரும்புவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

பிரித்தானியா அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் 150க்கும் மேற்பட்டோரின் குடியுரிமை பறிக்கப்படவுள்ளதாகவும், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று தீவிரவாதிகளை திருமணம் செய்துகொண்ட பெண்களும் இப் பட்டியலில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மட்டும் சந்தேகத்துக்குரிய 40 பேரின் கடவுச்சீட்டுகளை முடக்கியுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.