ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே : மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மகிந்த

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இன்னும் தானே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
வேறு யார் கட்சியின் தலைவராக இருந்தாலும் உத்தியோகபூர்வமாக நானே தலைவராக இருப்பதாகவும் தனக்கு கட்சியின் மாநாட்டை நடத்தவும் உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர் பதவியிலிருந்து தான் விலகவோ விலக்கப்படவோ இல்லை. இன்னும் கட்சியில் பெரும்பான்மையானவர்கள் என்னுடனேயே இருக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகையொன்று அவரால் வழங்கப்பட்டுள்ள நேர் காணலொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein