யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்..!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் நெல்லியடி பொலிஸ் பிரிவின் கரம்பான்வெளி பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

இப் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையை முடிந்து பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Allgemein