கொழும்பு துறைமுகத்தில் விமான நிலையம் அமைக்க திட்டம்

கொழும்பு துறைமுகப் பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை, பெருநகர மற்றும் மேல்மாகாண அபி்விருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கொழும்புத் துறைமுகம் பிராந்தியத்தில் வலுவான துறைமுகமாக மாற்றமடையும்.

10 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லாமல், கொழும்பு கோட்டேயில் இருந்தே மக்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

பிராந்தியத்தில் வலுவான துறைமுகமாக கொழும்புத் துறைமுகத்தை மாற்றும் வகையில், கிழக்கு, மேற்கு முனையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Allgemein