மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் சட்ட விரோத மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினரைக்கண்டு மண் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோதே இந்த துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதன் காரணமாக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயதான மதுசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுவனின் சகோதரரான 18 வயதான நிசாந்தன் என்பர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.