ஜேர்மன் விளையாட்டு நடுவத்தின் „மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2017“

ஜேர்மன் விளையாட்டு நடுவத்தின் „மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2017“ – தென் மாநிலம்.

முன்சன் நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் சிறப்பாக ஒருங்கு படுத்தப்பட்ட முறையில் நிகழ்வுகள் ஆரம்பித்தன இந்த நிகழ்வில்

பொதுச்சுடரை நூரன்பேர்க் நகர பொறுப்பாளர் திரு கந்தையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றி வைக்க மாவீரர் நினைவுச்சுடரை மேஜர் தமிழரசன் மற்றும் கப்டன் சிவம் ஆகியோரின் சகோதரி திருமதி கமலகுமாரி இராசலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை லெப் கேணல் விந்தனின் சகோதரி சிவநேசன் சுவேந்திரா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து
ஜேர்மனி தேசியக் கொடி தமிழர் விளையாட்டு கூட்டமைப்பின் ஜேர்மன் பொறுப்பாளர் திரு ராஜகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஜேர்மன் கிளை பொறுப்பாளர் சிறீரவி அவர்களும் தமிழாலயக் கொடியை தமிழாலய பொறுப்பாளர் திரு லோகானந்தம் அவர்களும் ஏற்றிவைத்தனர் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டுது.

விளையாட்டு நிகழ்வின் முதல் நிகழ்வாக அனைத்து தமிழாலயங்களின் மாணவர்களும் வெற்றிச்சுடரை ஏற்றிவைத்தனர். தொடர்ந்து விளையாட்டு வீரர்களும் நடுவர்களும் விளையாட்டுப் போட்டியின் சட்டங்களை மதிப்போம் என்று உறுதி எடுத்து கொண்டார்கள். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. தொடர்ந்து மனுன்ஷன் தமிழாலய மாணவர்களால் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசியச் சின்னங்கள் தாங்கிய நடன நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்தன…

Allgemein விளையாட்டு