2020 ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் வரப்போகும் மைத்திரி

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யுமென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறினாலும் அது அவரின் தனிப்பட்ட நிலைப்பாடே எனவும் ஆனால் கட்சியென்ற ரீதியில் அவரை நிறுத்துவதற்கே யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.