லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பெண்கள் செய்யும் புதிய வியாபாரம்

ஊரில் சும்மா பற்றைக்குள் இருக்கும் மரம் தான் கருவேப்பிலை. ஆனால் அதற்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு. சில வருடங்களுக்கு முன்னர், கருவேப்பிலையோடு பூச்சிகள் லண்டனுக்கு வருகிறது என்று கூறி. இலங்கையில் இருந்து கருவேப்பிலை வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை காரணம் காட்டியே பல தமிழ் கடைக்காரர்கள் கருவேப்பிலையின் விலையை கூட்டி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். ஆனால் இந்த சைக்கிள் காப்பில் சில பெண்கள் செய்யும் வேலையைக் கேட்டால் தலையே சுற்றுகிறது .

இலங்கைக்கு விடுமுறை செல்லும் பெண்கள் தற்போது சூட்க்கேஸ் நிறைய கொண்டுவருவது கருவேப்பிலையதான். அதனை வீட்டில் வைத்து பேக் செய்து, கடைக்கு 50 பென்சுக்கு அல்லது 75 பென்சுக்கு விற்றுவிடுகிறார்கள். கடைக் காரர்கள் அதனை 99 பென்ஸ் , சிலர் 1.50 பவுன்ஸ்சுக்கு கூட விற்கிறார்கள். ஒரு சூட்க்கேஸ் முட்ட கொண்டு வந்து விற்றால் பிளேன் காசு கவர் ஆகிவிடும் என்கிறார்கள் பெண்கள். அதுமட்டுமா ? மாசி தூள், நெத்தலி என்று வருமானத்தை அள்ளி குவிக்கவும் இவர்கள் , தயங்குவது இல்லை

Merken

Merken