முல்லைத்தீவு பாடசாலையில் குண்டு வெடிப்பு, 8 பேர் வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவார பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் அப் பாடசாலையைச் சேர்ந்த 8 மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 06 மாணவிகளும் 02 மாணவர்களும் மயக்கமுற்றநிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளவினுள் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு நெருப்பு வைத்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மீன்களை பிடிக்க பயன்படுத்தப்படும் “டைனமைட்” ரக வெடிபொருளே வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரனையை பொலிசார் மேற்க் கொண்டுவருகின்றனர்.