சர்வதேசம் இலங்கை மீது இழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமாம் – சிங்கக்கொடி சம்பந்தன்

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசம் போதுமான அழுத்தத்தை இலங்கை மீது கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதன்போது வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான பங்களிப்புக்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு சிங்கபூர் உதவிகளை நல்க வேண்டும்.

இதேவேளை நாட்டில் நீடித்த அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிங்கப்பூர் ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் எமது மக்களின் அபிவிருத்திகள் குறித்தும் கவனமெடுக்கவேண்டும்

எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் அது தொடர்பில் சிங்கப்பூர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்” என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.