எழுங்கள் எங்கள் தேசியத்தலைவர் தந்த கடமையை நிறைவேற்ற…………..ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே விடிவின் வெளிச்சம்காணுவோம்.
(பகுதி (3) தொடர்கிறது
காலம் எமக்களித்த வீரத்தலைவன் ஊருவாக்கிய வீரத்தலைவன் படைகள் விள விள ஏழுந்து வீரத்தை உலகத்தில் பிரதி பலித்து நின்ற வீரத்தமிழினம் நாம் ஆனால் இன்று முள்ளி வாய்காலுடன் முடங்கிவிட்டோமா..?
அள்ளி எடுத்து கொள்ளிபோட முடியாமல் எம்மினத்தை சிங்கள அரசும் அதன் கட்டளையின் அரக்ககுணம் தன்னை எம்மினத்தை அழிக்கவேண்டும் என்ற சிங்கள அரசுகளின் வஞ்சகக்குணம் மாறாது என்பதும் உண்மை
உள்நாட்டு யுத்தத்துக்கு வௌிநாடுகளையும் இணைத்து கபட நாடகம் நடத்தியே மகிந்தா அரசு எம்மினத்தை இந்திய ஏகாதிபத்தியத்துடன் அழித்து முடித்ததாக எண்ணுகிறது எண்ணட்டும்பார்போம் விடிவுகாண தமிழன்வரலாறு மீண்டு மீண்டும் தொடரும் என்பதை அறியாச்சிங்களம் மட்டுமல்ல உலகநாடுகளும்அடக்க அடக்க வெடிக்கும் கிளர்சி என்பதை அறிந்தும்
தன்னால் முடியாமல் மற்றவரிடம் மண்டியிட்டே எம்மினத்தை முள்ளி வாய்கால்வரை கொண்டு சென்று கொண்று குவித்தது சிங்களம்ஆடிய வஞ்ச நாடம் எமது போராட்டத்துக்கு வீழ்சி என்று எண்ணாதீர்
அதுமட்டுமல்ல சிங்கள இராணுவம் பிணமாக்கிய எம்மின ஆத்மாக்கள் புலம்பித்திரிகிறது எழும்பி வருகிறது புதிய பாடமதை கற்பிக்கஅவர்களைஅன்னைமண்ணில் புதைக்கூட விடாமல் விதையிட்டாற்போல் அரச இராணுவங்கள் தனைநெருங்கி வருகிறது எம்மின ஆத்மாக்கள்
இன் நிலை அனைத்தையும்மறந்து நிற்பானா மறத்தமிழன் அதனால் புலத்திலும்சரி நிலயத்திலும்சரி புல்லுரிவிகள் சொல்வருடிகளுக்கு எம்மினம் செயல் வடிவில் செய்து காட்டவேண்டிய பல விடையங்கள் உள்ளது
ஆனாலும் புலத்தில் தம் நலத்தை முன்னிலைப்படுத்தும் இனத் தமிழராய் நம்மில் சிலர் வாழ்வது தவறு என்பதை எம்மினம் உணரவில்லையா..?
அல்லது முள்ளிவாய்க்காலுடன் முடங்கிவிட்டோமா..?
மூடர்கள்தான் ஆகிவிட்டோமா…?
மேல் கூறியது போல் வெள்ளித்தட்டில் அள்ளி எமக்கு வந்து சிங்கள ஆட்சிகள் சமத்துவம் தந்திருந்தால் எம்மண்ணில் இவ்வளவு உயிர்கொடை தேவையற்றதாகும் என்பது காலா காலமாக நம்மினம் உணர்ந்ததே…
தந்தைசெல்வாவின் அகம்சை தொடக்கம்
தேசியத்தலைவர்காலத்தில் அகம்சை அதுக்கு சாத்தியம் இல்லை என்பதால் ஆயுதபோராட்டம் தொடங்கப்பட்டது என்பது நாம் அனைவரும் உணந்த உண்மை அல்லவா …..?(பகுதி (4) தொடர்வான்ஈழத்தமிழன்)