போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாதாம்: நாடகமாடும் சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்தோ அல்லது போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன், இலங்கை அரசாங்கத்தின் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையை வரவேற்று, ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமென தெரிவித்த சம்பந்தன், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இனிமேலும் நடைபெறமாட்டாது என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.