பிரதியமைச்சரின் வாகனத்தில் கைத்துப்பாக்கி, கைக்குண்டு – விசாரணைகள் ஆரம்பம்

பிரதி அமைச்சரினால் மீளக் கையளிக்கப்பட்ட சொகுசு வாகனத்தினுள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது குறித்து, இரண்டு வெவ்வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர,  புதிய வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொண்டதை அடுத்து, தனது பாவனையில் இருந்த வாகனத்தை அமைச்சிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்த வாகனத்தை நிதி அமைச்சின் அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் கைத்துப்பாக்கி ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவையிரண்டும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டவையாகும். இதையடுத்து, இரண்டு வெவ்வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Allgemein