தமிழர் இயக்குகின்ற பிரான்சில் தயாராகும்… „DANS LA MAISON DU CAPITAINE“

தமிழர் இயக்குகின்ற பிரான்சில் தயாராகும்…
„DANS LA MAISON DU CAPITAINE“
„கேப்டன் வீட்டில்“
பிரெஞ்சு மொழி பேசும் முழு நீள திரைப்படம்!

படப்பிடிப்பை பார்வையிட்டு வாழ்த்து வழங்கிய
நிறுவனதின் பொறுப்பாளர் திருமதி மார்க்ரெட் அவர்கள்,மற்றும் இயக்குனர்,நடிகர்கள் புகைப்படங்களில்.

„எஸ்.எம்.பி.எஸ்“ பிரெஞ்சு திரை நிறுவனமும்,
„கீதாலயா“ திரை நிறுவனமும் இணைந்து வழங்கும்
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்கள் எழுதி, இயக்கும் பிரெஞ்சு மொழி பேசும் முழு நீள மர்மங்கள் நிறைந்த திரைப்படம்!
„கேப்டன் வீட்டில்“ „DANS LA MAISON DU CAPITAINE“

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம் மாதம்
06.07.2017 ல் ஆரம்பமாகி வேகமாக நடைப்பெற்று வருகின்றது.

பல பிரெஞ்சுப்படங்களை இயக்கிய ஒரு பெண் இயக்குனர் தான் இந்த வாய்ப்பினை வழங்கினார் என்றும்,இப்படத்தை உருவாக்க இவர்கள் கையாளும் முறைகளும்,ஒத்துழைப்பும் தன்னை மிகவும் உற்சாகப் படுத்துவதாகவும்,நமது இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்கள் மகிழ்சியுடன் தெரிவித்தார்!

மிக விரைவில் வேலைகள் முடிந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது புலத்தி நாம் இனம் வாழும் நாட்டில் அந்த நாட்டு நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுடன் இணைந்து எமது கலைஞர்கள் பணிபுரிவது என்பது வாழ்த்துதலுக்கு உரியது அந்த வகையில் இவர்கள் இந்த முழு நிளப்படம் சிறப்புறவாழ்த்துவோம்

Allgemein வெளியீடுகள்