வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ‘தெரிவுக்குழு’ கோரும் பிரேரணை ஒத்திவைப்பு!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 98வது அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே, ‘வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக விசாரணைக் குழு அமைக்க வேண்டாம், மாறாக, மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும்’ என்கிற பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதி முன்வைக்கவிருந்தார்.

எனினும், குறித்த பிரேரணை திருத்தங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை, திருத்தங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein தாயகச்செய்திகள்