11 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம்

11 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அனபகம் சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படாத நிலையிலேயே இதுவரை இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் இல்லங்கள் அரசாங்கத்தாலும், வடக்கு மாகாண சபையாலும் பதிவு செய்யப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்கு என சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள அன்பகம் சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படாத நிலையிலேயே இயங்கி வந்துள்ளது.
பதிவு செய்யப்படாத குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களே சிறுவர்களை தங்க அனுமதியும் வழங்கி வந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 11 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமையும், சில மாதங்களுக்கு முன்னர் மற்றுமொரு மாணவியும் குறித்த சிறுவர் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Allgemein தாயகச்செய்திகள்