பிரான்ஸ் தமிழர் 20வது விளையாட்டு விழா 2017

பிரான்ஸ் – தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னெடுப்பில் இடம்பெற்றிருந்த 20வது தமிழர் விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள், உணவுகள் உள்ளடங்க பல்வேறு மகிழ்வூட்டல் நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருந்தது.

பிரென்சு மற்றும் தமிழ் அரசியற் பிரதிநிதிகள் மற்றும் சமூகப்பிரமுகர்கள் என பலரும் பங்கெடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசைஅணிவகுப்பான இண்ணிய அணி தொடக்க நிகழ்வினை அலங்கரித்திருந்தது.

சிறுவர் முதல் பெரியோர் வரைக்குமான பல்வேறு வகையான விளையாட்டுப்போட்டித்திடல்கள் வெளியெங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

மரதன் ஓட்டப் போட்டிகள் இம்முறை சிறப்பு விளையாட்டாக இவ்வாண்டு தொடக்கி வைக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களை உள்ளடக்கிய சிறார்களின் அணிவகுப்பு திடலை அலங்கரித்தது மட்டுமன்றி, கராத்தே தற்காப்பு கலையினரின் அணிவகுப்பும் திடலை அலங்கரித்திருந்தது.

நாடகங்கள், பாடல்கள், கூத்து என பல கலைநிகழ்வுகளும் அரங்கேறி இருந்தன.

ஐ.பி.சி தமிழ் மக்களோடு உறவாட மேடையோடு கூடிய குடில் ஒன்றினை அமைத்திருந்ததோடு, நேயர்மனத்தில் மக்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.

நேயர் மன்றத்தில் இணைத்து கொள்கின்வர்களுக்கு 150 யுறோக்களுக்கு மேல் பெறுமதியான பரிசுப்கூப்பன் வழங்கப்பட்டிருந்தன.

மக்களை உள்வாங்கிய மகிழ்வூட்டல் நிகழ்வுகளை ஐ.பி.சி தமிழ் கலைஞர்கள் வழங்கியிருந்ததோடு, பரிசுப் பொதிகளையும் வாரிய வழங்கியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Allgemein