தேசப்புயல்கள்

கடலுக்குள் புயலாகும் அலைகள்
இருளுக்குள் ஒளியான கரும்புலிகள்
கனவில் கூட கரும்புலியென
சொல்ல மறுப்பார்கள்
கரிகாலன் புகைப்படத்தை
நெஞ்சில் சுமப்பார்கள்
எமன் தேதி குறிக்கு முன்னே
வெடிப்பார்கள்
எமனையே கலங்க வைத்து
பகை முடிப்பார்கள்
தோழர்கள் தூங்கும் போது
முத்தமிட்டு போவார்கள்
நாளை வெடித்த போது
அறிவார்கள் என்றெண்ணி
வெடிக்கும் போது
இவர்கள் வேதனை
யார் அறிவர்
வெடித்த போது
இவர்கள் சாதனை நாமறிவோம்
சிதறும் போதும்
தலைவன் சிந்தனை சொல்வார்கள்
நித்தம் சிரித்த
முகத்துடனே திரிவார்கள்
சித்திரகுப்தர்
அன்று எழுதியதை
ஏமாற்றி செல்வார்கள்
வெடியாய் வெடித்து
விதியையும் வெல்வார்கள்
பேழையில் உறங்க
மறுப்பார்கள்
பேணி வைத்த
இலட்சியத்தை காப்போமேன்று
தலைவனின் இலட்சிய
கனவோடு கலப்பார்கள்
சாகும் போது சாதனை
படைப்பார்கள் கரும்புலிகள்.

மட்டுநகர் கமல்தாஸ்