ஜேர்மன் குடிமக்களுக்கு ஓர் நற்செய்தி

ஜேர்மனியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவி அதிகளவில் உயர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜேர்மன் சட்டப்படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெற்றோருக்கும் அரசு குறிப்பிட்ட தொகையை நிதியுதவியாக வழங்கி வருகிறது.

2017-ம் ஆண்டின்படி, ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் 192 யூரோ வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியானது குழந்தையின் முதல் மாதம் முதல் அதற்கு 25 வயது பூர்த்தி ஆகும் வரை வழங்கப்படுகிறது.

இதேபோல், இரண்டாவது குழந்தைக்கு 192 யூரோவும், மூன்றாவது குழந்தைக்கு 198 யூரோவும், நான்காவது மற்றும் அதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெற்றோருக்கும் 223 யூரோ வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, 4 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் 805 யூரோ நிதியுதவியாக பெற்று வருகிறார்கள்.

இந்த நிதியுதவியை தான் தற்போது உயர்த்த உள்ளதாக ஆளும்கட்சியான CDU அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு பெற்றோருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவியுடன் கூடுதலாக 25 யூரோ வழங்கப்படும் என சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.

ஒருவேளை, இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தில் இருந்து 7,356 யூரோ தள்ளுபடி செய்யப்படும்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த சலுகையை 8,820 யூரோவாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Allgemein உலகச்செய்திகள்