சிறீலங்காவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்தவிருந்த தாக்குதல் முறியடிப்பு!

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்குவதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போட்டிருந்த திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

தூதரகத்தைத் தாக்குவதற்காக ஐஎஸ் அமைப்பானது கட்டுநாயக்காவிலிருந்து ஒரு விமானத்தைக் கடத்தவிருந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் சிறீலங்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஐஎஸ் இயக்கத்திற்கு பலர் உதவி செய்து வருவதாகவும், அது தொடர்பான தகவல்களையும், நேரடி எச்சரிக்கைகளையும் விடுக்க அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த எச்சரிக்கை வெளிவந்ததன் பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வழமைபோல் அல்லாது பணிநேரத்தைக் குறைத்துக் கொண்டு உரிய நேரத்திற்கு முன்னரே வீடு திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது