ஜேர்மனியில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி தொடர்வதால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மத்திய வேலை நிறுவன ஏஜன்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு குறியீட்டு புள்ளிகள் கடந்த ஏப்ரலில் 135 ஆக இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 19 புள்ளிகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா விதமான துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. வேலைக்கு மிக அதிக அளவில் ஆட்கள் தேவைப்படும் துறைகளாக உற்பத்தி, வர்த்தக நிலைகள், சேவைத் தொழில் மற்றும் கட்டுமானம் ஆகியவை திகழ்கின்றன.

அதே போல தற்காலிகமான பணிக்கும் அதிக ஆட்கள் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம் ஜேர்மனியின் பொருளாதாரம் நிலையாகவும், வளர்ச்சியை நோக்கி செல்வதும் தான்.

அதே போல ஜேர்மனியின் நுகர்வோர்கள் 2000 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், ஐரோப்பியாவின் பொருளாதாரம் குறித்து மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், உள்நாட்டு பொருளாதாரத்தை ஜேர்மனியர்கள் மிகச்சிறந்த வடிவத்தில் பார்க்கிறார்கள் என்பதும் வலுவான பொருளாதாரம் மற்றும் அதிக வருமானம் தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

Allgemein உலகச்செய்திகள்