விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டது ரஷ்யாவா?

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி தமிழ் மக்களை அழித்திருப்பதை அண்மையில் பிரித்தானியாவின் தி கார்டியன் என்ற ஊடகம் அம்பலப்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைக் கூட்டத் தொடர் நடைபெறும் ஒரு சூழ்நிலையில்,அங்கு தன்னை பாதுகாக்க நெளிந்து போராடும் ஸ்ரீலங்கா அரசுக்கு இந்த ஆதாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை முன்பே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது. முன்னைய அரசாங்கம் அது குறித்து பதில் எதுவும் அளிக்கவில்லை. இனப் படுகொலை அரசு, தாம் கொத்துக் குண்டுகளை பாவிப்பதில் என்ன தவறு என்று கருதியிருக்கக்கூடும். ஈழப் போரின் இறுதியில் கொத்துக் குண்டுகளுடன், நஞ்சுக் குண்டுகள், நஞ்சு வாயு முதலியனவும் வீசப்பட்டு மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இவற்றுக்கான ஆதாரங்களாக கொல்லப்பட்ட மக்களின் புகைப்படங்கள் பல வெளிவந்திருக்கின்றன.

இதேவேளை இன்றும் கொத்துக் குண்டுகளின் தாக்கத்துடன், நஞ்சுக் குண்டுகளின் தாக்கத்துடன் பலர் ஈழத்தில் வாழ்கின்றனர். சிறுநீரக செயலிழப்பு, இருதய நோய்கள் முதலிய இத்தகைய தடைசெய்யப்பட்ட குண்டுகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இவை மக்களை போர்க்களத்தில் மாத்திரம் கொல்வதில்லை. போருக்குப் பின்னரும் மெல்ல மெல்ல மக்களை அழிக்கின்றது. இந்த நோக்கிலேயே இத்தகைய தடைசெய்யப்பட்ட குண்டுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் பாவித்தது. இது வெளிப்படையான இன அழிப்பு சார்ந்தது

Merken

Allgemein தாயகச்செய்திகள்